கூடுதலாக 10% உழைப்போம்..! ஆட்ட நாயகன் விருது வென்ற ரூதர்ஃபோர்டு!
ஆட்ட நாயகன் விருது வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர் பேசியிருப்பதாவது...
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர் ஷெர்ஃபானே ரூதர்ஃபோர்டு கடவுளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச, முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீ. அணி 20 ஓவர்களில் 196/6 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து 19 ஓவர்களில் 166-க்கு ஆல் அவுட்டானது.
வாய்ப்பளித்த கடவுளுக்கு நன்றி
Advertisement
Advertisement
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ரூதர்ஃபோர்டு 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகன் விருது வென்ற ஷெர்ஃபானே ரூதர்ஃபோர்டு பேசியிருப்பதாவது:
முதலில், இதுபோல மிகப்பெரிய போட்டியில் விளையாட வாய்ப்பளித்த கடவுளுக்கு நன்றி. காயம்பட்ட எனது விரல்கள் நன்றாக இருக்கின்றன. அடுத்த போட்டிக்குள் இன்னும் குணமாகிவிடுமென நினைக்கிறேன்.
ஆதில் ரஷித் மிகவும் சவாலான வீரர் என்று தெரியும். அணியின் கலந்தாலோசனையிலும் இவர்தான் மிகவும் கடினமான வீரர் என்று பேசினோம்.
எனக்கு என்ன முக்கியம் என்றால், அவரை ஆட்டத்தில் இருந்து விலக்கி வைக்க வேண்டுமென நினைத்தேன்.
இன்னும் கூடுதலாக 10 சதவிகிதம் உழைப்போம்
உலகக் கோப்பையில் விளையாட அதிகமாக உழைக்க வேண்டியிருந்தது. என்னைப் பொருத்தவரை சூழ்நிலையைப் புரிந்து, எனது பாணியைக் கடைப்பிடிப்பேன். அது சரியாக நடந்தால், எப்போதும் கடைசியில் ரன்களைக் குவிப்பேன்.
தெளிவான எண்ணத்துடன் ரன்களைக் குவிக்க வேண்டுமென விளையாடுகிறேன். 10 ரன்கள் குறைவாக இருக்கிறோம் என நினைத்தேன். ஏனெனில், இங்கிலாந்து மிகவும் அதிரடியான அணி என்று எங்களுக்குத் தெரியும்.
இருந்தும் எங்கள் வீரர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானது.
கயானா என்ற நாடும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆனால், கிரிக்கெட் என்பது அணி விளையாட்டு. அடுத்தடுத்த போட்டிகளில் மற்றவர்கள் முன்வந்து ஆட்டத்தை வெல்ல உதவுவார்கள் என நம்புகிறேன்.
மிகப் பெரிய தொடர்களில் நல்ல உத்வேகத்தைக் கொண்டு வர வேண்டும். இப்பொது இருக்கும் இந்த உத்வேகத்தை அப்படியே நாங்கள் தொடர வேண்டும். நாங்கள், போகப் போக முன்னேற முயற்சிப்போம். இன்னும் கூடுதலாக 10 சதவிகித உழைப்பை அளிக்க முயற்சிப்போம் என்றார்.
Yeah, for sure, but just happy that the guys got over the line says West Indies' Sherfane Rutherford.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.