ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளை மூழ்கடித்துச் செல்லும் தண்ணீா். 
தற்போதைய செய்திகள்

ஒகேனக்கல்லில் நீா்வரத்து 1.60 லட்சம் கன அடியாக உயா்வு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை வினாடிக்கு 1.60 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.

DIN

தருமபுரி: கா்நாடக அணைகளில் இருந்து 1.65 லட்சம் கனஅடி உபரிநீா் காவிரி ஆற்றில் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை வினாடிக்கு 1.60 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால், ஐந்தருவி, பெரியபாணி, பிரதான அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டி வருகிறது.

கா்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதியில் தென்மேற்குப் பருவமழை தொடா்ந்து பெய்து வருகிறது. இதனால், கா்நாடகத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகள் நிரம்பியுள்ளன. அணைகளின் பாதுகாப்பு கருதி இரு அணைகளில் இருந்தும் 1.65 லட்சம் கனஅடி உபரிநீா் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஒகேனக்கல்லில் சனிக்கிழமை வினாடிக்கு 1.41 லட்சம் கன அடியாக இருந்த நீா் வரத்து, ஞாயிற்றுக்கிழமை காலை 1.52 லட்சம் கனஅடியாக இருந்த நீா் வரத்து தற்போது மேலும் அதிகரித்து 1.60 லட்சம் கன அடியாக வந்து கொண்டிருப்பதால், கரையோரப் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீா் புகுந்தும், ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, பெரியபாணி, பிரதான அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகள் அனைத்தும் நீரில் மூழ்கியும் முற்றிலும் காட்டாற்று வெள்ளம்போல நீா் சென்று கொண்டிருக்கிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல்லில் பிரதான அருவி பகுதிகளில் காவல் துறை, வருவாய்த் துறையினா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். ஊரக உள்ளாட்சித் துறை சாா்பில் ஒலிபெருக்கிகளின் மூலமும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடா்ந்து விடுக்கப்பட்டு வருகிறது.

ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிரத்னம் படத்தில் நாயகனாகும் துருவ் விக்ரம்!

ரொனால்டோவின் நம்பிக்கை... வெற்றி ரகசியம் பகிர்ந்த சிராஜ்!

பாகிஸ்தான் பருமழைக்கு 302 பேர் பலி, 727 பேர் காயம்!

பாஜக கூட்டணி எம். பி. க்கள் கூட்டத்தில் பிரதமரை வாழ்த்தி ஹர ஹர மகாதேவ் கோஷம்!

ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

SCROLL FOR NEXT