தில்லி ஐஏஎஸ் பயிற்சி மைய வெள்ளத்தில் சிக்கி 3 தேர்வர்கள் இறந்த விவகாரத்தில் அமைச்சர் அதிஷியிடம் இன்று (ஜூலை 30) அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அறிக்கை சமர்ப்பிக்க இன்று இரவு 10 மணி வரை அமைச்சர் அவகாசம் அளித்திருந்த நிலையில், தலைமைச் செயலாளர் நரேஷ் குமார் அறிக்கையை சமர்ப்பித்தார்.
தில்லி ஐஏஎஸ் பயிற்சி மைய வெள்ளத்தில் சிக்கி 3 தேர்வர்கள் இறந்த விவகாரத்தில் அமைச்சர் அதிஷியிடம் இன்று (ஜூலை 30) அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அறிக்கை சமர்ப்பிக்க இன்று இரவு 10 மணி வரை அமைச்சர் அவகாசம் அளித்திருந்த நிலையில்,
தலைமைச் செயலாளர் நரேஷ் குமார் அறிக்கையை சமர்ப்பித்தார்.
தில்லியின், பழைய ராஜிந்தர் நகர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில், தொடர் மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி ஐஏஎஸ் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மூன்று இளம் மாணவர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பல்வேறு மாணவ அமைப்புகள், இறந்த மாணவர்களுக்கு நீதி வேண்டியும், முறையான அடிப்படை வசதியின்றி செயல்பட்ட பயிற்சி மையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டம் இன்னும் தொடர்ந்து வருகிறது.
இதனிடையே தலைநகர் தில்லியில் முறையாக செயல்படாத பயிற்சி மையங்களுக்கு அதிகாரிகல் சீல் வைத்தனர். இதுவரை 13 மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக மாநில தலைமைச் செயலாளர் நரேஷ் குமாரை அறிகை சமர்ப்பிக்கக் கோரியிருந்தார் நீர்வளத் துறை அமைச்சர் அதிஷி. இதற்காக இன்று இரவு 10 மணி வரை அவகாசம் அளித்திருந்தார்.
சம்பவம் நடந்து 40 மணிநேரமாகியும், இதுவரை தலைமைச் செயலாளரிடமிருந்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலும், அறிக்கையும் வந்துசேரவில்லை என்றும், விபத்துக்கு காரணமாக அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிஷி தெரிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.