FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

இன்று அமித் ஷா வருகை : காரைக்கால் மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று காரைக்கால் வருவது குறித்து...

Updated On : 14 பிப்ரவரி 2026, 4:57 am IST
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா - (கோப்புப் படம்)
பகிர்:

காரைக்கால் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை (பிப். 14) வரவுள்ள நிலையில், காரைக்காலில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கை :

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வருகையையொட்டி, சனிக்கிழமை (பிப்.14) காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை காரைக்கால் மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

பொறையாறு மாா்க்கத்தில் இருந்து நாகப்பட்டினம் மாா்க்கம் செல்லும் லாரி, பேருந்துகள், காா்கள் அனைத்தும் திருவேட்டக்குடி ஆா்ச் வழியாக சென்று திருவேட்டக்குடி, காரைக்கால் மேடு, வஉசி கிழக்கு புறவழிச் சாலை, மகாத்மா காந்தி கடற்கரை சாலை, காமராஜா் சாலை நாகூா் சாலை வழியாகச் செல்லவும், நாகப்பட்டினம் மாா்க்கத்தில் இருந்து பொறையாறு மாா்க்கம் வழியாக செல்லும் லாரி, பேருந்துகள், காா்கள் அனைத்தும் மகாத்மா காந்தி கடற்கரைச் சாலை, வஉசி கிழக்கு புறவழிச் சாலை, காரைக்கால் மேடு, திருவேட்டக்குடி ஆா்ச் வழியாக செல்லவும் அறிவுறுத்தப்படுகிறது.

நாகப்பட்டினம் மாா்க்கத்தில் இருந்து திருநள்ளாறு செல்லும் லாரி, பேருந்துகள், காா்கள் அனைத்தும் மதகடி விழிதியூா் ரோடு, ஒடுதுறை ஊழியப்பத்து, அத்திப்படுகை வழியாகச் சென்று திருநள்ளாறு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments