கோப்புப்படம் Din
தற்போதைய செய்திகள்

கேரளத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்: பினராயி விஜயனிடம் ஸ்டாலின் உறுதி

“வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், கேரளத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

DIN

சென்னை: “வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், கேரளத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று அந்த மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் நான் உறுதியளித்துள்ளேன்.” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வயநாடு நிலச்சரிவு குறித்து பேசினார்.

அப்போது, நான் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பேசினேன். சேதாரத்தை இன்னும் கணக்கெடுக்க முடியவில்லை என்றும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சொன்னார். தமிழ்நாடு அரசின் சார்பாக எந்த உதவிகளும் செய்கிறோம் என்று சொல்லியிருக்கிறோம். அதற்காக

இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் மருத்துவக் குழு அனுப்பியிருக்கிறோம். அதுமட்டுமல்லாமல், தமிழக அரசின் சார்பில், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 கோடி பணமும் அனுப்பியிருக்கிறோம். தேவைப்பட்டால் இன்னும் உதவிகள் செய்கிறோம் என்று சொல்லியிருக்கிறோம் என்றார்.

ஆளுநரின் பதவிக் காலம் முடியப் போகிறது. அவருக்கு மீண்டும் ஆளுநர் பதவி கொடுக்க வாய்ப்பு இருக்கிறது என்று சொல்கிறார்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, நான் குடியரசுத் தலைவரும் இல்லை, பிரதமரும் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமாரசம்பவம் டிரெய்லர்!

ஜிஎஸ்டி வரிகள் குறைப்பு: வீட்டு உபயோகப் பொருள்கள் விலை குறையும்!

இந்தியாவைப் பாராட்டிய ஜெர்மனி!

குமாரசம்பவம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ஜம்மு - காஷ்மீரில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம்!

SCROLL FOR NEXT