முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு 1 லட்சம் கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 81,500 கன அடியிலிருந்து 1,00,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Updated On : 31 ஜூலை, 2024 at 7:20 AM
காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 81,500 கன அடியிலிருந்து 1,00,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பகிர்:

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 81,500 கன அடியிலிருந்து 1,00,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 21,500 கன அடி வீதமும்; 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 78,500 கன அடி வீதமும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 82,000 கன அடியாக உள்ளது.

Advertisement

கால்வாய் பாசனத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும்; நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 8 மணி முதல் வினாடிக்கு 1,00,00 கன அடியிலிருந்து 1,25,000 கன அடியாக அதிகரிக்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments