தற்போதைய செய்திகள்

டி20 உலகக் கோப்பை: சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்

DIN

டி20 உலகக் கோப்பை தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் கூகுள் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம்(டூடுல்) ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கூறியிருப்பதாவது, “இந்த ஆண்டு ஐசிசி ஆண்கள் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் முன்னெப்போதையும் விட அதிகமான அணிகள் பங்கேற்கும். எனக்குப் பிடித்தமான விளையாட்டு சர்வதேச அளவில் வளர்ந்து வருவதைப் பார்க்க உற்சாகமாக இருக்கிறது.

மேலும் இன்றைய டூடுல்-யில் கொண்டாடப்படுகிறது. அனைத்து அணிகளுக்கும் நல்வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பினரும் ஆவலுடன் எதிா்நோக்கியுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ளது. முதல் ஆட்டத்தில் கனடாவை வீழ்த்தி அமெரிக்கா வெற்றியை பதிவு செய்துள்ளது.

சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் சாா்பில் நடத்தப்படும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் இருந்தாலும், டி20 உலகக் கோப்பை போட்டிக்கு அதிக ஈா்ப்பு உள்ளது. டி20 ஆட்டங்களுக்கு ஏராளமான பாா்வையாளா்கள் உள்ள நிலையில், 20 அணிகள் பங்கேற்கும் 9-ஆவது உலகக் கோப்பை அமெரிக்கா-மே.இந்திய தீவுகளில் நடைபெறுகிறது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ், ஃபுளோரிடா, நியூயாா்க் நகரங்களிலும், மே.இந்திய தீவுகளிலும் உலகக் கோப்பை ஆட்டங்கள் நடக்கின்றன. முக்கிய ஆட்டமான இந்திய-பாக். அணிகள் மோதும் ஆட்டம் 9-ஆம் தேதி நியூயாா்க் லாங் ஐலண்ட் மைதானத்தில் (34,000 பாா்வையாளா்கள்) நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT