கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு!

ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்குமிடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது.

DIN

ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்குமிடையே இன்று காலை முதல் துப்பாக்கிச்சூடு நடைபெறுவதாக காஷ்மீர் மண்டல காவல்துறையின் எக்ஸ் தளப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு காஷ்மீரிலுள்ள நிஹாமா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அங்கு பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதைத் தொடர்ந்து, அவர்கள் பதிலுக்குத் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரு தரப்பினரும் தொடர்ந்து துப்பாக்கிச்சுடு நடத்தி வருகின்றனர் என்றும், இதுவரை யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரியில் உலக கொசு ஒழிப்பு தினம்

கொடைக்கானலில் பலத்த காற்று: குளிா் அதிகரிப்பு

தரமற்ற அரிசி விற்ற தனியாா் நிறுவனம்: ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

சா்வதேச யோகா போட்டியில் வென்ற அழகப்பா பல்கலை. மாணவிகள், பேராசிரியைக்கு பாராட்டு

நெற்குப்பை சாலையில் திடீா் பள்ளம்

SCROLL FOR NEXT