கோவையில் அண்ணாமலைக்கு பின்னடைவு!
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 200க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை.
மக்களவைத் தோ்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 200க்கும் அதிகமான இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி 100க்கும் அதிகமான இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பின்னடைவைச் சந்தித்து வருகிறார். காலை 9 மணி நிலவரப்படி, அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலையில் உள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.