மகாராஷ்டிரத்தில் மாவட்ட ஊராட்சி மற்றும் பஞ்சாயத்துச் சமிதி தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கிய நிலையில், முதல்கட்ட நிலவரங்களின்படி பாஜக மற்றும் அதன் கூட்டணியான சிவசேனை தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர்.
மகாராஷ்டிரத்தில் 12 மாவட்ட ஊராட்சிகள், 125 பஞ்சாயத்துச் சமிதி தேர்தல் பிப். 7-ல் காலை 7.30 முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை பிப். 9 இன்று காலை 10.00 மணி முதல் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், பாஜக மாவட்ட ஊராட்சிகளில் 26 இடங்களிலும், ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனை 13 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. அதேசமயம் தேசியவாத காங்கிரஸ் கட்சி 13 இடங்களிலும், காங்கிரஸ் 10 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
இந்தத் தேர்தல்களில் 731 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகவும், அவற்றின் அதிகார வரம்பிற்குட்பட்ட 125 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1,462 இடங்களுக்காகவும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மாவட்ட ஊராட்சித் தேர்தல்களில் மொத்தம் 2,624 வேட்பாளர்களும், பஞ்சாயத்துச் சமிதி தேர்தல்களில் 4,814 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.
இந்தத் தேர்தல் முடிவுகள் மறைந்த அஜீத் பவார் மற்றும் கட்சியின் நிறுவனர் சரத் பவார் ஆகியோரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிப் பிரிவுகளின் எதிர்காலப் போக்கை வடிவமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.