முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை இடைத்தேர்தல்: முன்னாள் முதல்வர் மனைவிக்கு பின்னடைவு

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன், காண்டே இடைத்தேர்தலில் பின்தங்கியுள்ளார்.

Updated On : 4 ஜூன், 2024 at 7:25 AM
பகிர்:

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன், காண்டே சட்டப்பேரவை இடைத்தேர்தலில் முதல்சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, தனது போட்டியாளரான திலீப் குமார் வர்மாவை எதிர்த்து 1,939 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம் எல் ஏ சர்பராஸ் அகமது ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், தனது பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, நில மோசடி தொடர்பான பணமோசடி வழக்கு தொடர்பாக ஜனவரி 31-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →