கோவிந்த் கர்ஜோல் 
தற்போதைய செய்திகள்

கர்நாடக முன்னாள் துணை முதல்வர் வெற்றி

கர்நாடக முன்னாள் துணை முதல்வர் கர்ஜோல், சித்ரதுர்கா தொகுதியில் வெற்றி பெற்றார்.

DIN

கர்நாடகத்தின் சித்ரதுர்கா மக்களவைத் தொகுதியில் பாஜகவைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் துணை முதல்வர் கோவிந்த் கர்ஜோல் 48,121 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கோவிந்த் கர்ஜோல் 6,84,890 வாக்குகள் பெற்று, காங்கிரஸ் வேட்பாளரான பி.என்.சந்திரப்பாவை தோற்கடித்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பி.என்.சந்திரப்பா 6,36,769 வாக்குகள் பெற்றார்.

விஜயபுரா மாவட்டத்தைச் சேர்ந்த கர்ஜோல், பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள முதோல் தொகுதியில் இருந்து ஐந்து முறை கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார்.

ஜனதா தளத்தில் இருந்த 73 வயதான கோவிந்த் கர்ஜோல் பாஜகவின் பல்வேறு துறைகளை வகித்து அமைச்சராகவும், கட்சியின் மாநில துணைத் தலைவராகவும், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

முதலில் சித்ரதுர்கா பாஜக வேட்பாளராக எம்.பி.யும், மத்திய சமூக நலன் அமைச்சருமான நாராயணசாமி அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்குப் பதிலாக கோவிந்த் கர்ஜோல் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெறி மறுவெளியீடு ஒத்திவைப்பு!

டெலிவரி ஊழியர்களின் நலன் கருதி! 10 நிமிட சேவையை ரத்து செய்யும் பிளிங்கிட்

கூட்டணி தொடர்பாக டிடிவி தினகரனுக்கு எந்த குழப்பமும் அழுத்தமும் இல்லை: அமமுக

அனைவருக்கும் சமமான கல்வி வேண்டும்; தனியார்மயம் கூடாது : ராகுல் காந்தி

சூர்யா எனக்குத் துணையாக நிற்கிறார்: ஞானவேல் ராஜா

SCROLL FOR NEXT