பாலியல் வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி
ஹாசன் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா 42,649 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளார்.
கர்நாடகத்தின் ஹாசன் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஷ்ரேயாஸ். எம். படேல் 42,649 வாக்குகள் வித்தியாசத்தில் பாலியல் வழக்கில் சிக்கி வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து தற்போது கைதான மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணாவை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
காங்கிரஸ் வேட்பாளர் ஷ்ரேயாஸ். எம். படேல் 6,72,988 வாக்குகளைப் பெற்ற நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா 6,30,339 வாக்குகளும் பெற்றனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக ஜேடி(எஸ்) கட்சித் தலைவர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிட்டார்.
பெண்களை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்த குற்றத்துக்காக ஏப்ரல் 26 ஆம் தேதி கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அவர் தற்போது கைது செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வுக் குழுவின் (எஸ்ஐடி) காவலில் உள்ளார்.