நடிகர் சுரேஷ் கோபி வெற்றி!
கேரளத்தின் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றார்!
கேரளத்தின் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளரான நடிகர் சுரேஷ் கோபி 4,12,338 வாக்குகள் பெற்று 74,686 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்ததாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சுரேஷ் கோபி கேரள பாஜகவின் முதல் மக்களவை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுனில் குமார் 3,37,652 வாக்குகளும், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் முரளிதரன் 3,28,124 வாக்குகளும் பெற்றுத் தோல்வியடந்தனர்.