முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் 39 இடங்களிலும் இந்தியா கூட்டணி அமோக வெற்றி!

39 மக்களவைத் தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி அமோக வெற்றி

தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் 39 இடங்களிலும் இந்தியா கூட்டணி அமோக வெற்றி!

39 மக்களவைத் தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி அமோக வெற்றி

Updated On : 4 ஜூன், 2024 at 8:10 PM
பகிர்:

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் முடிவுகள் அறிவிக்கப்பட தாமதமான நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு பின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை விட 1,79,907 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

நள்ளிரவு 1 மணி நிலவரப்படி, தென் சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனை விட 2.25 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். விரைவில் இத்தொகுதியில் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து, தமிழ்நாடு புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி பெருவாரியான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →