சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் படம் | பிரேம் சிங் தமாங் எக்ஸ் தளம்
தற்போதைய செய்திகள்

சிக்கிம்: ஜூன் 9-ல் முதல்வராக பதவியேற்கிறார் பிரேம்சிங் தமாங்

சிக்கிம் முதல்வராக பி.எஸ்.தமாங் ஜூன் 9 ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.

DIN

சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா தலைவர் பிரேம் சிங் தமாங், ஜூன் 9 ஆம் தேதி இரண்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்கப் போவதாக புதன்கிழமை தெரிவித்தார்.

பிரேம்சிங் தமாங் மற்றும் அவரது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் பதவியேற்பு விழா மாநிலத் தலைநகரான காங்டாக்கில் உள்ள பல்ஜோர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து முதல்வர் பிரேம் சிங் தமாங் கூறுகையில், "புதிய அமைச்சர்கள் குழுவின் பதவியேற்பு விழா ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது போலவே, ஜூன் 9 ஆம் தேதி பால்ஜோர் மைதானத்தில் நடைபெறும். சிக்கிமின் பல்வேறு பகுதிகளில் இருந்து, எஸ்கேஎம் கட்சியினர் ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிக்கிமில் உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் ஒரே மக்களவைத் தொகுதியில் எஸ்கேஎம்மின் வெற்றிக்கு, கட்சியின் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு நன்றி. எஸ்கேஎம் தலைவர்கள் மற்றும் அதன் தொண்டர்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, கட்சிக்கு மகத்தான வெற்றிக்கு வழிவகுத்தது” என்றார்.

மக்களவைத் தேர்தலுடன் ஒரே நேரத்தில் நடந்த தேர்தலில் 32 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 31 இடங்களில் எஸ்கேஎம் வெற்றி பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் என்ன வித்தியாசம்? ரசிகை ஆவேசம்

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

SCROLL FOR NEXT