தற்போதைய செய்திகள்

டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு!

அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

DIN

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்று நடைபெற்ற லீக் சுற்றின் 25-வது போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும், அமெரிக்காவும் மோதுகின்றன.

நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஜூன் 12) நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பௌலிங் தேர்வு செய்தார்.

இந்திய அணி தான் ஆடிய 2 லீக் ஆட்டங்களிலும் வென்று முதலிடத்தில் உள்ளது. அதே நேரம் அமெரிக்கா அணியும் தான் ஆடிய 2 லீக் ஆட்டங்களிலும் வென்று 2 வது இடத்தில் உள்ளது.

இரண்டு அணிகளும் ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT