படம் | பிசிசிஐ
கிரிக்கெட்

3-வது டி20: இந்தியா பந்துவீச்சு; தொடரைக் கைப்பற்றுமா?

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான மூன்றாவது டி20 போட்டி குவாஹாட்டியில் இன்று (ஜனவரி 25) நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்கிறது.

இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அர்ஷ்தீப் சிங் மற்றும் வருண் சக்கரவர்த்திக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவி பிஷ்னோய் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்து அணியில் ஸகாரி ஃபோல்க்ஸுக்குப் பதிலாக கைல் ஜேமிசன் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது.

In the third T20 match against New Zealand, the Indian team won the toss and elected to bowl.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘இனிவரும் தலைமுறைகளுக்கும் உத்வேகமளிக்கும்!' - பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ள சாதனையாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

காற்று மாசுபாட்டுக்கு நாம் கொடுக்கும் விலை மிகப்பெரியது: ராகுல் காந்தி கவலை

சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது!

ஹேவெல்ஸ் 3வது காலாண்டு லாபம் 8% உயர்வு!

யு19 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபாரம்!

SCROLL FOR NEXT