நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று (ஜனவரி 31) நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்யவுள்ளது.
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இஷான் கிஷன் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சன் மற்றும் அக்ஷர் படேல் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.