மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் 
தற்போதைய செய்திகள்

நீட் தேர்வில் வினாத் தாள் கசிந்ததற்கான ஆதாரம் இல்லை! -தர்மேந்திர பிரதான்

நீட் தேர்வில் வினாத் தாள் கசிந்ததற்கான ஆதாரம் இல்லை என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

DIN

மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் வினாத் தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டை நிராகரித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், அதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், “தேசிய தேர்வு முகமை மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. அது மிகவும் நம்பகமான அமைப்பாகும். நீட் தேர்வில் வினாத் தாள் கசிந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. அதன் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். எந்த ஒரு மாணவரும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வோம்” என்றார்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் பிற படிப்புகளில் சேர 1,563 நீட் 2024 தேர்வர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவதற்கான முடிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், ஜூன் 23 ஆம் தேதி மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்தத் தேர்வர்கள் மறுதேர்வை எழுத விரும்பவில்லை என்றால், அவர்களின் முந்தைய மதிப்பெண்கள், கருணை மதிப்பெண்கள் இல்லாமல் வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!

ரூ.30 கோடிக்கு ஏலம் போனாலும் ரூ.18 கோடி தானா? ஐபிஎல் புதிய விதியால் வீரர்களுக்கு சிக்கல்!

மினி ஏலத்துக்கு முன்பாக ஃபார்முக்கு திரும்பிய பதிரானா! சிஎஸ்கே அணிக்கு மீண்டும் வருவாரா?

மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்தின் பெயர் மாற்றம்! மக்களவையில் மசோதா தாக்கல்!

பாகிஸ்தானில் பேருந்தில் பயணம் செய்த 18 பேர் கடத்தல்!

SCROLL FOR NEXT