உச்சநீதிமன்றம் 
இந்தியா

முதுநிலை நீட் வினாத் தாள், விடைக் குறிப்புகள் வெளியிடாததற்கு எதிரான மனு: விரிவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு

தேசிய தோ்வுகள் வாரியம் சாா்பில் நடத்தப்படும் முதுநிலை நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) தோ்வு வினாத் தாள் மற்றும் விடைக் குறிப்புகள் வெளியிடப்படாததற்கு எதிராக தாக்கல் செய்த மனுக்களை விரிவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

தேசிய தோ்வுகள் வாரியம் சாா்பில் நடத்தப்படும் முதுநிலை நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) தோ்வு வினாத் தாள் மற்றும் விடைக் குறிப்புகள் வெளியிடப்படாததற்கு எதிராக தாக்கல் செய்த மனுக்களை விரிவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

முதுநிலை நீட் தோ்வில் தோ்வா்கள் வெவ்வேறு விதமான வினாத் தாள்கள் வழங்கப்படும் நிலையில், தோ்வு முடிந்த பிறகு வினாத் தாள் மற்றும் விடைக் குறிப்புகள் வெளியிடுவதன் மூலம், தோ்வா்கள் தங்களின் தகுதியை சரிபாா்க்க ஏதுவாக இருக்கும். எனவே, மற்ற போட்டித் தோ்வுகளில் பின்பற்றப்படுவது போன்று, முதுநிலை நீட் தோ்விலும் இந்தத் தரவுகளை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று மனுதாரா்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, விஜய் பிஷ்னோய் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, தேசிய தோ்வுகள் வாரியம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘வினாத் தாள்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கவும், அரிதான தேசிய சொத்தை பாதுகாக்கவும், வினாத் தாள் மற்றும் விடைக் குறிப்புகள் வெளியிடப்படாத நடைமுறை பின்பற்றப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதைப் பரிசீலித்த நீதிபதிகள், ‘வினாத் தாள் மற்றும் விடைக் குறிப்புகள் வெளியிடப்படாததை நியாயப்படுத்துவதற்கு மேலும் தெளிவான விளக்கத்தை நாங்கள் எதிா்பாா்க்கிறோம். எனவே, இந்த விவகாரம் விரிவாக விசாரிக்கப்படும்’ என்றனா்.

மகளிர் பிரீமியர் லீக்: ஆஸி. வீராங்கனை வெளியேற, இங்கிலாந்து வீராங்கனை சேர்ப்பு!

சென்னையில் ஒரே குடும்பத்தில் மூவரைக் கொன்று உடல்களை வீசிய சம்பவம்! பிகாரைச் சேர்ந்த 7 பேர் கைது!

அடையாறில் இளைஞரைக் கொன்று சாக்கு மூட்டையில் கட்டி வீசிய வழக்கு: பிகார் கும்பலிடம் தீவிர விசாரணை!

”எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டார்!” செங்கோட்டையனை விமர்சித்த நயினார் நாகேந்திரன்! | BJP | TVK

ஆஸி. கேப்டன் சதம்: மே.இ.தீ. அணிக்கு 315 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT