கைதி தப்பி ஓடிய புரசடை உடைப்பு திறந்தவெளி சிறைச்சாலை. 
தற்போதைய செய்திகள்

திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து கைதி தப்பி ஓட்டம்

சிவகங்கை அருகே புரசடை உடைப்பு திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓடிய கைதியை போலீஸார் தேடிவருகின்றனர்.

DIN

சிவகங்கை அருகே புரசடை உடைப்பு திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓடிய கைதியை போலீஸார் தேடிவருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் மகன் கோபால்(29). இவர் கடந்த 2021 ஆம் ஆண்டில் சிறுமியை பாலியியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு கொலை செய்ய முயற்சித்தது தொடர்பாக அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 5 ஆண்டுகள் தண்டனை பெற்று, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புரசடை உடைப்பு திறந்தவெளி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.

தண்டனை காலம் இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து கைதி கோபால் தப்பி ஓடிய தகவல் வெள்ளிக்கிழமை அதிகாலையில் சிறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இது குறித்து சிறைச்சாலை தலைமை வார்டன் முத்து, காளையார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் செழியன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தப்பி ஓடிய கைதி கோபாலை போலீஸார் தேடிவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

SCROLL FOR NEXT