பிரதமர் நரேந்திர மோடி  
தற்போதைய செய்திகள்

நல்ல ஆரோக்கியத்திற்கு சக்கராசனம் பயிற்சி செய்யுங்கள்: பிரதமர் மோடி அறிவுரை

நல்ல ஆரோக்கியத்திற்கு சக்கராசனத்தை பயிற்சி செய்யுங்கள். இது இதயத்திற்கு சிறந்தது மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது

DIN

புதுதில்லி: நல்ல ஆரோக்கியத்திற்கு சக்கராசனத்தை பயிற்சி செய்யுங்கள். இது இதயத்திற்கு சிறந்தது மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது என பிரதமர் மோடி அறிவுரை வழங்கி உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள விடியோ பதிவில்,

நல்ல ஆரோக்கியத்திற்கு சக்கராசனத்தை பயிற்சி செய்யுங்கள். இது இதயத்திற்கு சிறந்தது மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது என கூறியுள்ளார். சக்கராசனம் செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றண் மற்றும் பலன்கள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.

சக்கராசனம் என்பது உடலை சக்கரம் போல் வளைத்துக் காட்டும் ஒரு ஆசனப்பயிற்சி நிலையாகும். இந்த சொல் சமஸ்கிருத மொழியில் இருந்து வந்தது. "சக்ரா" என்றால் சக்கரம் எனவும்,ஆசனம் என்றால் "நிலை" என்றும் பொருளாகும். இது பார்ப்பதற்கு மேற்புறமாக வில்லை போன்று வலைந்து காணப்படும் நிலை.

நீண்ட நேரம் உட்கார்ந்தவாறு கணினி முன்பு வேலை செய்பவர்கள், இந்த ஆசனத்தை நாள்தோறும் சிறிது நேரம் செய்து வருவதன் மூலம் முதுகு வலியில் இருந்து விடுபடலாம். முயற்சித்துதான் பாருங்களேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT