முகப்பு
தற்போதைய செய்திகள்

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 40 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ. 53,520-க்கு விற்பனையாகிறது.

Updated On : 19 ஜூன், 2024 at 5:55 AM
Gold prices fall by Rs 192 per ounce
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ. 53,520-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 120 குறைந்தும், செவ்வாய்க்கிழமை மீண்டும் பவுனுக்கு ரூ. 40 உயா்ந்து ரூ. 53,560-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், புதன்கிழமை மீண்டும் பவுனுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 53,520-க்கும், கிராமுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 6,690-க்கும் விற்பனையாகிறது.

இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ரூ. 95.60-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 400 குறைந்து ரூ. 95,600-விற்பனையாகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →