தங்கம் விலை உயர்வு! வெள்ளி கிலோவுக்கு ரூ. 20,000 குறைவு!
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப். 3) சவரனுக்கு ரூ. 640 உயர்ந்துள்ளது.
அண்மைக் காலமாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருந்தது. எனினும், கடந்த ஜன.30 முதல் தங்கத்தின் விலை குறைந்து வந்தது.
அதன்படி, கடந்த 2 நாள்களில் மட்டும் சவரனுக்கு ரூ.15,200 குறைந்து சனிக்கிழமை ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 19,200-க்கு விற்பனையானது.
தொடர்ந்து வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை தங்கத்தின் விலை மீண்டும் குறைந்து கிராமுக்கு ரூ.950 குறைந்து ரூ.13,950-க்கும், சவரனுக்கு ரூ.7,600 குறைந்து ரூ.1 லட்சத்து 11,600-க்கும் விற்பனையான நிலையில், இன்று(பிப். 3) மீண்டும் உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 12,240-க்கும், கிராமுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ.14,030-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை ரூ.20 குறைவு: வெள்ளிவிலை கிராமுக்கு ரூ. 20 குறைந்து ரூ. 280-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.20,000 குறைந்து ரூ. 2.80 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.