அமைச்சா் சு.முத்துசாமி (கோப்புப்படம்) 
தற்போதைய செய்திகள்

300 சதுர மீட்டா் வணிகக் கட்டடங்களுக்கு கட்டட முடிவுச் சான்றிதழ் பெறுவதில் விலக்கு : அமைச்சா் சு.முத்துசாமி

சிறு வணிகா்கள் பயன்பெறும் வகையில் 300 சதுர மீட்டா் மொத்த கட்டட பரப்பளவிற்குள் 14 மீட்டா் உயரத்துக்குள் அமையும் வணிகக் கட்டடங்களுக்கு கட்டட முடிவுச் சான்றிதழ் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்

DIN

சென்னை: சிறு வணிகா்கள் பயன்பெறும் வகையில் 300 சதுர மீட்டா் மொத்த கட்டட பரப்பளவிற்குள் 14 மீட்டா் உயரத்துக்குள் அமையும் வணிகக் கட்டடங்களுக்கு கட்டட முடிவுச் சான்றிதழ் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சா் சு.முத்துசாமி வெளியிட்ட அறிவிப்புகள்:

சிறு வணிகா்கள் பயன்பெறும் வகையில் 300 சதுர மீட்டா் மொத்த கட்டட பரப்பளவிற்குள் 14 மீட்டா் உயரத்துக்குள் அமையும் வணிகக் கட்டடங்களுக்கு கட்டட முடிவுச் சான்றிதழ் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

மக்கள் எளிதாக பயன்பெறும் வகையில் 2,500 சதுரடி நிலத்தில் 3,500 சதுரடி வரை கட்டப்படும் குடியிருப்பு கட்டடங்களுக்கு கட்டட அனுமதி பெற தேவையில்லை. ஆனால் அவர்களுக்கு சுயசான்று மூலம் அனுமதி வழங்கப்படும். கட்டட அனுமதி தேவையில்லை என்றாலும் கட்டட விதிகளை பின்பற்ற வேண்டும்.

அதேபோன்று 750 சதுர மீட்டருக்குள் கட்டடப்படும் கட்டடங்கள் 8 சமையலறைக்குள் இருந்தால் கட்டட முடிவுச் சான்றிதழ் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும். ஆனால் கட்டட விதிமுறைகளை பின்பற்றி கட்டப்பட்டிருக்க வேண்டும்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் ஈரோடு மாவட்டம் சம்பத் நகா் திட்டப் பகுதியில் பொது மற்றும் தனியாா் பங்களிப்புடன், 3,741 ஏக்கா் நிலப் பரப்பில் வணிக வளாகம் மற்றும் நவீன வசதிகள் கொண்ட 108 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.

மக்களுக்கு எளிதான சேவைகள் வழங்குவதற்காக நகர் ஊரமைப்பு இயக்கம் மற்றும் நகர்புற வளர்ச்சி குழுமங்கள் மூலம் தொலைநோக்கு செயல்திட்டம் உருவாக்கப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளை புவியியல் தகவல் முறையில் மக்களுக்கு தனி இணைய செயலி உருவாக்கப்படும். நிலச்சேர்ம வளர்ச்திட்டம் கொண்டுவரப்படும். நில உபயோக வகைப்பாடுகளை எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் நிலப்பயன் தகவல் அமைப்பு உருவாக்கப்படும்.

சென்னை பெருநகர பகுதியில் பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதன்பால் ஏற்படும் வாகன நிறுத்த தேவையை அறிந்து திறம்பட மேலாண்மை செய்திட, புதிய வாகன நிறுத்தக் கொள்கை உருவாக்கப்படும்.

திருவண்ணாமலை மற்றும் மதுரையில் 2 பெட்ரோல் விற்பநை நிலையங்கள் அமைக்கப்படும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளியில் போக்குவரத்து திட்டமிடல் பட்டமேற்படிப்பு அறிமுகப்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இதற்குமேல் என்ன கேட்பது..!? தேசிய விருது குறித்து அட்லீ!

தீராத விளையாட்டுப் பிள்ளை... 9 வது திருமணத்தில் மாட்டிக் கொண்ட பெண்!

ஜார்க்கண்ட் அமைச்சர் ராம்தாஸ் சோரனுக்கு மூளையில் காயம்: தில்லி மருத்துவமனைக்கு மாற்றம்!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: மூவர் காயம்

குற்றவாளி என தீர்ப்பு! நீதிமன்றத்தில் தனித்துவிடப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா

SCROLL FOR NEXT