கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோரிடம் ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டு திமுக எம்எல்ஏக்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக வெளியிட்ட அறிக்கைகளுக்காகப் பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்குத் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. டி. உதயசூரியன் (சங்கராபுரம் தொகுதி) மற்றும் வசந்தம் கார்த்திகேயன் (ரிஷிவந்தியம் தொகுதி) ஆகியோர் பி.வில்சன் அசோசியேட்ஸ் மூலமாக வழக்குரைஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இந்த நோட்டீஸைப் பெற்றுக்கொண்ட 24 மணி நேரத்துக்குள், ஏதேனும் ஒரு முன்னணித் தமிழ், ஆங்கில நாளேட்டின் ஒரு பதிப்பின் வாயிலாகவும் தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களின் வாயிலாகவும் தங்களிடமும் கள்ளக்குறிச்சி மக்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்;
தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்குத் தலா ஒரு கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும்;
இந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்றோ வேறு வகையிலோ பொய்யான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.