மிரட்டலான ரஜினி.. லோகேஷ் வெளியிட்ட புகைப்படம்!
கூலி திரைப்படத்திற்கான நடிகர் ரஜினிகாந்த்தின் தோற்றப் புகைப்படத்தை இயக்குநர் லோகேஷ் வெளியிட்டுள்ளார்.
கூலி திரைப்படத்திற்கான நடிகர் ரஜினிகாந்த்தின் தோற்றப் புகைப்படத்தை இயக்குநர் லோகேஷ் வெளியிட்டுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.
இப்படத்திற்கான நடிகர்களும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், அபிராமி உள்ளிட்டோர் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
தங்கத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் பெயர் அறிவிப்பு டீசர் வெளியானது. இதனால், இப்படம் தங்கக் கடத்தல் பின்னணியில் ஆக்சன் திரைப்படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்டையன் படப்பிடிப்பை முடித்து ஓய்வில் இருக்கும் ரஜினி, கூலி படப்பிடிப்பிற்குத் தயாராகி உள்ளார்.
இந்த நிலையில், கூலி திரைப்படத்திற்கான நடிகர் ரஜினிகாந்த்தின் தோற்றப் புகைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்
மேலும், கூலி திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கும் எனவும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.