தமிழகத்துக்கு வர வேண்டிய திட்டங்களெல்லாம் உ.பி.க்கு செல்லக் காரணம் யார்?
தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய திட்டங்களையெல்லாம் உ.பி.க்கு செல்ல யார் காரணம் என்பது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் பேசியுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய திட்டங்களையெல்லாம் உத்தரப் பிரதேசத்திற்குச் செல்வதற்கு யார் காரணம் என்பது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் பேசியுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று(ஜூன் 26) நிதி, மனித வள மேலாண்மை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுகால நன்மைகள் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்றது.
இதற்கு, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்து உரையாற்றினார். அதில் அவர் தெரிவித்ததாவது:
Advertisement
Advertisement
மாநில அரசுகள் தங்களுடைய வரி விதிக்கக்கூடிய அதிகாரங்களை விட்டுக் கொடுத்திருக்கிறது. ஆனால் 30-6-2022-க்குப் பிறகு இனிமேல் அந்த வரியை நமக்குக் கொடுக்க முடியாது என்று மத்திய அரசு இழப்பீட்டை நிறுத்தியதன் காரணமாக ஏறத்தாழ ரூ. 20,000 கோடி நமக்கு இன்றைக்கு வரவேண்டியிருக்கிறது.
உத்தரப் பிரதேசம் நமக்கு மேலே போகிறது; உத்தரப் பிரதேசத்திற்கு பின்னால் நாம் போகிறோம் என்று சொன்னால், சூத்திரதாரி யார் என்பதை நீங்களே புரிந்துக்கொள்வீர்கள்.
யார் கயிறை இழுக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய திட்டங்களையெல்லாம் உத்தரப் பிரதேசத்திற்குச் செல்வதற்கு யார் காரணம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
நீங்களும் அறிவோம்; நாங்களும் அறிவோம்; இங்கே இருக்கக்கூடிய நாட்டு மக்களும் அறிவார்கள். இந்த ஜிஎஸ்டி-ஐப் பொறுத்தமட்டில், நமக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான வரியை நீங்கள் பெற்றுத் தர வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன் என்று அவர் பதில் அளித்துப் பேசினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.