தற்போதைய செய்திகள்

மழை பிடிக்காத மனிதன் படத்தின் டிரைலர் அறிவிப்பு!

விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு!

DIN

விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

10 என்றதுக்குள்ள, கோலி சோடா படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் விஜய் மில்டன். இவரின் புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கிறார்.

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு ’மழை பிடிக்காத மனிதன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

விஜய் மில்டன் கதை எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ், சரத்குமார், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. 

இப்படத்தில் இசையமைப்பாளர் ராயின் இசையமைப்பில் ‘தீரா மழை’ , இசையமைப்பாளர் ஹரி டபுசியாவின் இசையமைப்பில் ‘தேடியே போறேன்’ ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.

இப்படத்துக்கு சென்சார் குழு யு/ஏ சான்றிதழை வழங்கியதாக படக்குழு முன்னதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மழை பிடிக்காத மனிதன் படத்தின் டிரைலர் வரும் ஜூன் 29 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

SCROLL FOR NEXT