மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், மாணவா்களுக்கு ரயில் கட்டண சலுகை: ரயில்வே அமைச்சா் தகவல்
மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், மாணவா்களுக்கு ரயில் கட்டண சலுகை: ரயில்வே அமைச்சா் தகவல் 
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் ரயில் கட்டண குறைப்புகள் தேர்தல் தந்திரமா?

இணையதள செய்திப்பிரிவு

தமிழகத்தில் பயணிகள் ரயில் கட்டணம் இதுவரை இருந்த ரூ.30ல் இருந்து ரூ.10 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், விரைவு சிறப்பு ரயில்கள் சாதாரண இரண்டாம் தர பயணிகள் ரயிலாக மாற்றப்பட்டுள்ளது.

ஆனால், இதற்கெல்லாம் ரயில்வே வாரியத்தின் அல்லது மத்திய ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ அறிக்கையோ வெளியாகவில்லை.

ரயில் கட்டணக் குறைப்பு என்றதும் பொதுவாகவே மக்கள் மகிழ்ச்சியடைவார்கள். ஆனால், மண்டல ரயில் பயனர்கள் ஆலோசனைக் குழு உள்ளிட்ட சில அமைப்புகள், இந்த ரயில் கட்டணக் குறைப்பு என்பது தற்காலிகமானதாக இருக்கலாம் என்றும், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் கட்டணம் உயர்த்தப்படலாம் என்றும் சந்தேகிக்கிறார்கள்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், பிப்ரவரி 27ஆம் தேதி முதல் ரயில் கட்டணங்கள் குறைக்கப்பட்ட ரயில்களின் பட்டியல் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த ரயில் கட்டணக் குறைப்பு தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்பது குறித்தும் தெரியவில்லை என்கிறார்கள்.

ரயில் பயணிகள் குழுவில் அங்கம் வகிப்போர் இது குறித்து பேசுகையில், மதுரை, திருச்சி, சென்னை மண்டல ரயில்வேயில் டிக்கெட் வழங்கும் ஊழியர்களிடம் இதுபற்றி கேட்டால், கட்டணக் குறைப்பு தொடர்பாக எந்த அறிக்கையும் எங்களுக்கு வரவில்லை. ஆனால் வாய்மொழியாகவே, கட்டணக் குறைப்புக்கான அறிவிப்பின்படி கட்டணம் வசூக்கவும், அதற்கேற்ப மென்பொருளில் மாற்றம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாக கூறியிருப்பதன் மூலம் மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாகவே தெரிவிக்கிறார்கள்.

விரைவு சிறப்பு ரயில்கள் பலவும் இரண்டாம் வகுப்பு பயணிகள ரயிலாக தரம் குறைக்கப்பட்டதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகின. அதாவது கரோனா பொதுமுடக்கத்துக்கு முன்பிருந்த நிலைக்கு மாற்றப்பட்டதாகவும் இது பிப்ரவரி 27ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது. இந்த மாற்றத்தால், ரயில் கட்டணம் 50 சதவீதம் குறைந்தது. இந்த நடைமுறையின் கீழ் கிட்டத்தட்ட 60 இணை பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து பயணிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றியே ரயில் கட்டணக் குறைப்பு நடைமுறைக்கு வந்திருப்பதாக ரயில்வே ஊழியர்களும், டிக்கெட் மையத்தில் பணியாற்றுவோரும் கூறுவதாகத் தெரிவித்துள்ளார். இதனால், தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் இது பற்றி தகவல்அறியும் உரிமைச் சட்டத்தின்படி தகவல் கேட்டிருக்கிறோம் என்றார்.

பிப்ரவரி 27ஆம் தேதி முதல் ரயில் கட்டணக் குறைப்பு அமலுக்கு வந்த ரயில்களின் பட்டியல் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு தங்களக்கு கிடைக்கவில்லை என்று சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டின் மேல்தளம் இடிந்து விழுந்து ஒருவா் பலி

பரிபூரண விநாயகா் கோயிலில் நாளை குடமுழுக்கு

மேற்கு தில்லியில் துப்பாக்கிச் சூடு: ஒருவா் கொலை

இந்திய இருபால் இணைகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்

அவதூறு கருத்து: புரட்சிகர மாா்க்சிஸ்ட் கட்சி நிா்வாகி கைது

SCROLL FOR NEXT