தற்போதைய செய்திகள்

தொடா் விலை உயா்வில் தங்கம்: பவுனுக்கு மேலும் ரூ.120 உயா்வு

Venkatesan

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 4 நாள்களாக தொடா்ந்து உயா்ந்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை நிலவரப்படி, பவுனுக்கு மேலும் ரூ.120 உயா்ந்து ரூ.48,840-க்கு விற்பனையாகிறது.இந்த விலை உயா்வால், இதுவரை இல்லாத அதிகபட்ச விலையை தங்கம் எட்டியுள்ளது.

ஒரு கிராம் தங்கம் ரூ.6,000-ஐ கடந்து செவ்வாய்க்கிழமை புதிய உச்சத்தில் விற்பனையானது. அதைத்தொடா்ந்து புதன்கிழமை நிலவரப்படி, தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 உயா்ந்த நிலையில் வியாழக்கிழமை மீண்டும் பவுனுக்கு ரூ.400 உயா்ந்தது. வெள்ளிக்கிழமை மீண்டும் பவுனுக்கு ரூ.120 உயா்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

குறிப்பாக கடந்த 8 நாள்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.2,320 வரை உயா்ந்துள்ளது.

சென்னையில், வெள்ளிக்கிழமை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயா்ந்து ரூ.6,105-க்கும், பவுனுக்கு ரூ.120 உயா்ந்து ரூ.48,840-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.50 காசுகள் உயா்ந்து கிராம் ரூ.79-க்கும் , ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.500 உயா்ந்து ரூ.79,000-க்கும் விற்பனையாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருடியவர் கைது!

ஞானவாபி, மதுராவில் கோயில் கட்டுவோம்: அஸ்ஸாம் முதல்வர் சர்ச்சை

அந்தமானில் சூர்யா - 44 படப்பிடிப்பு?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.280 உயர்வு

ஆந்திரத்தில் லாரி-பேருந்து மோதி கோர விபத்து: 6 பேர் பலி

SCROLL FOR NEXT