முகப்பு
தற்போதைய செய்திகள்

மகளிர் நாள்: முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கோலங்கள்!

உழைக்கும் மகளிர் நாளையொட்டி, தமிழகத்தில் ‘மகளிர் நலன் போற்றும் முதல்வருக்கு நன்றி’ என எழுதி மகளிர் தங்கள் வீடுகளுக்கு முன்பாக கோலமிட்டுள்ளனர்.

Updated On : 8 மார்ச், 2024 at 9:36 AM
பகிர்:

சென்னை: உலக உழைக்கும் மகளிர் நாளையொட்டி, தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு வரும் மகளிருக்கான திட்டங்களுக்கு முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ‘மகளிர் நலன் போற்றும் முதல்வருக்கு நன்றி’ என எழுதி மகளிர் தங்கள் வீட்டு முன்பாக கோலமிட்டுள்ளனர்.

மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணத் திட்டம், ஊதியத்துடன் கூடிய 12 மாதங்கள் பேறுகால விடுப்பு, பெண்கள் தடையின்றி உயர்கல்வி பெற புதுமைப்பெண் திட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன் தள்ளுபடி, தமிழ்நாடு மகளிர் கொள்கை 2024 என முதல்வர் அறிவித்துச் செயல்படுத்தி வரும் மகளிருக்கான திட்டங்கள் எண்ணற்றவை.

இத்திட்டங்களை எளிய வகையில் மகளிருக்கு எடுத்துச் சொல்லும் வகையிலும், முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ‘மகளிர் நலன் போற்றும் முதல்வருக்கு நன்றி’ என எழுதிக் கோலமிடும் வகையில் பெண்களை ஊக்குவிக்க வேண்டும் என தலைமைக் கழகத்திலிருந்து அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து இன்று உழைக்கும் மகளிர் நாளையொட்டி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மகளிர் தங்கள் வீட்டு முன்பாக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கோலமிட்டு வருகின்றனர். திமுக சார்பில் சமூக வலைத்தளத்திலும் #DMK4Women என்ற ஹேஷ்டேக் வழியாகப் பதிவுகள் இடப்பட்டன.

திமுக சார்பில் பல்வேறு இடங்களில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →