தற்போதைய செய்திகள்

தமிழக மீனவர்கள் 22 பேர் கைது : இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்டாமல் வேடிக்கைப் பார்க்கக் கூடாது!

Venkatesan

தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்டாமல் மத்திய அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 22 பேரை இலங்கை

கடற்படை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. அவர்களின் 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தங்களுக்கு உரிமையுள்ள இடங்களில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் அத்துமீறி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அண்மையில் தான் தமிழக மீனவர்கள் 4 பேருக்கு 6 மாதங்கள் முதல் ஓராண்டு வரை சிறைதண்டனை அளித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், அவர்களின் தண்டனையை ரத்து செய்யாத சிங்கள அரசு, இலங்கை சிறைகளில் சில வாரங்களாக அடைக்கப்பட்டிருந்த 18 மீனவர்களை விடுதலை செய்தது. அவர்கள் விமானம் மூலம் சென்னை வந்ததற்கு அடுத்த நாளே 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருப்பதை சகித்துக் கொள்ள முடியாது.

இலங்கை அரசு இந்தியாவிடமிருந்து அனைத்து உதவிகளையும் பெற்றுக் கொள்கிறது. இன்னொருபுறம் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து அத்துமீறல்களை கட்டவிழ்த்து விடுகிறது. அதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரங்களை சிதைத்துக் கொண்டிருக்கிறது. இது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்படும் சவால் ஆகும். இலங்கையின் இந்த சீண்டல்களை இந்திய அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

40 ஆண்டுகளாகத் தொடரும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்களைத் தடுக்கவும்,மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது கைது செய்யப்பட்ட 22 மீனவர்களையும், இலங்கை அரசால் பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள அனைத்து படகுகளையும் மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோயிலில் 1,008 விளக்கு பூஜை

ஆனந்தவல்லி வாய்க்காலை சீரமைக்கக் கோரிக்கை

சியாமா சாஸ்திரி ஜெயந்தி விழா இசை நிகழ்ச்சி

மகளிா் உரிமைத் தொகை திட்டம் 4.17 லட்சம் குடும்பத்தினா் பயன்

குடிநீா் குழாயுடன் பொருத்தப்பட்ட 12 மின் மோட்டாா்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT