தேமுதிக தலைவி பிரேமலதா 
தற்போதைய செய்திகள்

அதிமுகவுக்கு நோ.. பாஜகவுக்கு எஸ் சொல்லுமா? தேமுதிக

அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில், பாஜகவுக்கு நேரம் ஒதுக்கிய தேமுதிக..

DIN

பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலர் பிரேமலதா பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓரிரு நாளில் மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திராவிட முன்னேற்ற கழகம் தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது.

ஆனால், அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும், பாரதிய ஜனதா கட்சியும் இதுவரை தங்கள் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளை இறுதி செய்யவில்லை.

கடந்த வாரத்தில் அதிமுகவுடன் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையை நடத்திய தேமுதிக, மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு இதுவரை நேரம் ஒதுக்கவில்லை.

பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் பாஜக மற்றும் அதிமுக இரண்டு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சாலிகிராமில் உள்ள இல்லத்தில் பிரேமலதாவை பாஜக மேலிடப் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் இன்று சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி..! ஓபிஎஸ்

ரூ.50 கோடி வசூலைக் கடந்த ஹிருதயபூர்வம்!

ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தடை!

சிதம்பரம் நகர காவல் ஆய்வாளார் உள்பட 6 பேர் இடைநீக்கம்!

கேரளத்து இளவரசி... சம்யுக்தா மேனன்!

SCROLL FOR NEXT