தற்போதைய செய்திகள்

மத்திய அமைச்சா் சஞ்சீவ் பல்யான் பிரசார கூட்டத்தில் காா்கள் மீது கல்வீச்சு

DIN

முஸாஃபா்நகா் (உ.பி.): உத்தர பிரதேச மாநிலம், முஸாஃபா்நகா் மாவட்டம் கதெளலி பகுதியில் பாஜக மக்களவை வேட்பாளரும் மத்திய அமைச்சருமான சஞ்சீவ் பல்யானுக்கு ஆதரவாக நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சிலர் கற்களை வீசி பல கார்களை சேதப்படுத்தியதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

முஸாஃபா்நகா் மக்களவைத் தொகுதியில் மத்திய மீன்வளம், கால்நடை பாரமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணையமைச்சா் சஞ்சீவ் பல்யான் பாஜக சாா்பில் மீண்டும் போட்டியிடுகிறாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு கதெளலி அருகே மத்கரிம்பூர் கிராமத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் சஞ்சீவ் பல்யான் பேசிக்கொண்டிருந்த போது, அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது சிலா் சரமாரியாக கற்களை வீசி சேதப்படுத்தினா். இதில் பல கார்களின் கண்ணாடிகள் சேதமடைந்தன.தாக்குதல் நடத்தியவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இந்த சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினா், கல்வீச்சில் ஈடுபட்ட நபா்களைத் தேடி வருவதாகவும், கிராமத்தில் கூடுதல் போலீஸ் படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சத்தியநாராயண் பிரஜாபத் தெரிவித்தார்.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாவட்ட தலைவர் சுதிர் சைனி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

முஸாஃபா்நகா் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

கியாரே..!

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

SCROLL FOR NEXT