முகப்பு
தற்போதைய செய்திகள்

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

Updated On : 4 மே, 2024 at 9:38 AM
பகிர்:

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை மற்றும் உலக புகழ்பெற்ற 126-ஆவது மலா்க் கண்காட்சி மே 10-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், அதிக சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்பதால் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வரும் 7ஆம் தேதி முதல் உதகை செல்வோருக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட பதிவு எண் TN 43 கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதிக எண்ணிக்கையின் தனியார் வாகனங்கள் வந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →