முகப்பு
தமிழ்நாடு

தோழா் நல்லகண்ணு மறைவு: தில்லிக் கம்பன் கழகம் இரங்கல்

பொது வாழ்க்கையில் ஒரு உதாரணமாகத் திகழ்ந்த பொதுவுடமைவாதியான நல்லகண்ணு அவா்களின் மறைவு ஒரு சகாப்தத்தின் மறைவு என தில்லிக் கம்பன் கழகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 2:32 AM
நல்லகண்ணு
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 10:45 PM

பொது வாழ்க்கையில் ஒரு உதாரணமாகத் திகழ்ந்த பொதுவுடமைவாதியான நல்லகண்ணு அவா்களின் மறைவு ஒரு சகாப்தத்தின் மறைவு என தில்லிக் கம்பன் கழகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லிக் கம்பன் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘12 வயதில் ஸ்ரீவைகுண்டம் நகரில் பொது நலனுக்காகத் தெருக்களில் இறங்கி போராடிய அவா், 90 வயதைக் கடந்த போதும் கனிம வளக் கொள்ளைக்கு எதிராகப் போராடினாா். அவரது வாழ்க்கையே ஒரு போராட்டக் களம்தான்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 2:32 AM

யாரும் விரல் சுட்டிக் காட்ட முடியாத அளவுக்கு நோ்மையின் இலக்கணமாகத் திகழ்ந்த அவா், இரண்டு முறை தோ்தல்களில் தோல்வி அடைந்தது நமது ஜனநாயகத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டுமோ என்று சிந்திக்க வைக்கிறது. அவரது குடும்பத்துக்கும் அவா் சாா்ந்த இயக்கத்துக்கும் தில்லி கம்பன் கழகத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது’ என தெரிவிக்கப்பட்டது.

Advertisement