காணொளியில் பகிரப்பட்ட படங்கள் 
தற்போதைய செய்திகள்

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

கர்நாடக பாஜகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் இஸ்லாமிய வெறுப்புப் பிரசாரக் காணொளிகள் பதிவிடப்பட்டுள்ளன.

DIN

நடப்பு மக்களவைத் தேர்தலில் இஸ்லாமிய வெறுப்புப் பிரசாரம் பாஜகவினரால் அதிகமாக பரப்பப்பட்டு வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நம் நாட்டின் வளங்கள் அனைத்தையும் இஸ்லாமியர்களுக்கு வழங்கி விடுவார்கள் என்று, பிரதமர் தொடங்கி பல பாஜக தலைவர்களும் மிகவும் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.

தேர்தல் ஆணையமும், இதுவரையில் இஸ்லாமிய வெறுப்புப் பிரசாரம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, நேற்று (மே - 4) கர்நாடக பாஜகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் மேலும் ஒரு கேலிச்சித்திரக் காணொளி பதிவிடப்பட்டுள்ளது.

ஜாக்கிரதை என்று தலைப்பிடப்பட்டுள்ள அந்தக் காணொளியில், ராகுல் காந்தி கர்நாடக முதல்வர் சித்தராமையாவுடன் இணைந்து ஓபிசி, எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடுகளுடன் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டையும் சேர்ப்பதாகவும், இஸ்லாமியர்களுக்கு மட்டுமே அதிக நிதி ஒதுக்குவதால் அவர்கள் வளர்ந்து மற்றவர்களின் இடஒதுக்கீட்டை முழுவதும் பறிப்பதுமாக அந்த காணொளியில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற வெறுப்புப் பிரசாரத்தை பாஜக தொடர்ந்து செய்து வந்தாலும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, மக்களுக்கு தேர்தல் ஆணையத்தின் மீதுள்ள நம்பிக்கையை இழக்கச் செய்யும் என்று எதிர் கட்சியினரும், சமூக வலைதளப் பயனாளர்களும் விமர்சித்து வருகின்றனர்.

கடந்த சில நாள்களுக்கு முன்னர், பாஜக இந்தியாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக வெளியிட்ட காணொளியை எதிர்ப்புகள் எழுந்ததும் நீக்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தன்மானம்தான் முக்கியம் என்றால் தில்லி சென்றது ஏன்? இபிஎஸ்-க்கு டிடிவி தினகரன் கேள்வி!

சென்னையில் பெய்த கனமழையால் விமான சேவை பாதிப்பு!

ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ரத்த வெள்ளத்தில் வாலிபர் சடலம்! கொலையா? தற்கொலையா?

எழுத்தாளர் கி.ரா. பிறந்தநாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

புதிய உச்சத்தில் ரூ.83,000-ஐ நெருங்கிய தங்கம்! எகிறும் வெள்ளி விலை!

SCROLL FOR NEXT