தற்போதைய செய்திகள்

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஜலகண்டபுரம் பணிக்கனூரில் சடலமாக மீட்கப்பட்ட மூவர் அடையாளம் தெரிந்தது.

DIN

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஜலகண்டபுரம் பணிக்கனூரில் சடலமாக மீட்கப்பட்ட மூவர் அடையாளம் தெரிந்தது.

ஜலகண்டபுரம் - சின்னப்பம்பட்டி சாலையில் உள்ள பாலத்தின் அடியில் ஒரு பெண் உள்பட 3 பேரின் சடலங்களை நேற்று முன்தினம் ஜலகண்டாபுரம் காவல் துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே, அருகே இருந்த இருசக்கர வாகனத்தின் எண் மற்றும் அருகில் இருந்த பெட்ரோல் விற்பனை நிலைய சிசிடிவி காட்சி பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் மூவரும் பூலாம்பட்டி அருந்ததியர் காலனியை சேர்ந்த மாறன் மகன் செங்கோடன் (75), செங்கோடனின் மனைவி செண்டு (65), செங்கோடனின் மகன் சந்திரசேகர் (47) என்பது தெரியவந்ததுள்ளது.

இவர்களுக்கு சொந்தமான இரண்டு வீடுகளை விற்பனை செய்துவிட்டு கடந்த 29ஆம் தேதி வீட்டிலிருந்து புறப்பட்டவர்கள் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் இறப்பிற்கான காரணம் என்ன என்பது குறித்து உறவினர்களிடம் ஜலகண்டபுரம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக தங்களது வீடுகளை விற்று கடனை அடைத்து விட்டு மனம் உடைந்து இங்கு வந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

மேலும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT