கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

சென்னையில் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, மயிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை பனி சாரல் மழை பெய்தது.

DIN

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 96.6 முதல் 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், அக்னி நட்சத்திரம் தொடங்கிய 4-ஆவது நாளில் சென்னையில் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, மயிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை பனி சாரல் மழை பெய்தது.

கோடை வெயில் வாட்டி வந்த நிலைய.வந்த நிலையில், இந்த திடீர் பனி மழையால் வெப்பம் சற்று தணிந்து லேசான குளிர்ந்த காற்று வீசியது.

தமிழக உள் மாவட்டங்களில் புதன்கிழமை முதல் சனிக்கிழமை (மே 8-11) வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக குறையக்கூடும். அதன்படி, 2 டிகிரி செல்சியஸ் வரை குறைவும்.

வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 105 முதல் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வரையும், இதர மாவட்டங்களில் 102 முதல் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரையும், கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 96.8 முதல் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதியில், காற்றின் திசை மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் புதன், வியாழன் (மே 8,9) ஆகிய இரு நாள்கள் நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், தேனி, திண்டுக்கல், விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூா் மற்றும் திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (மே 9) நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம், ஈரோடு ஆகிய மாவடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் காணை, பெரும்பாக்கம், கோனூர், மாம்பழப்பட்டு, சென்னாகுனம், கல்பட்டு, பிடாகம் உள்ளிட்ட பகுதிகளிலும், செஞ்சியிலும் காலை முதல் மிதமான மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகாயம் முகம் பார்க்கிறது... மோனாமி கோஷ்

அழகிய... ஐஸ்வர்யா சர்மா!

ரூ.21,000 சம்பளத்தில் குழந்தைகள் சேவை மையத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தென்னாப்பிரிக்கா முன்னேற்றம்! இந்திய அணிக்கு பின்னடைவு!

கேரளத்தில் டிச. 9 உள்ளாட்சி தேர்தல்: 2.86 கோடி வாக்காளர்களில் பெண்களே அதிகம் - தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT