விழுப்புரத்தில் புதன்கிழமை காலை முதல் இடி மின்னலுடன் மிதமான கோடைமழை பெய்து வருகிறது.  
தற்போதைய செய்திகள்

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் புதன்கிழமை காலை இடி மின்னலுடன் கோடை மிதமான மழை பெய்தது. வெப்பத்தை தணிக்க பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

DIN

விழுப்புரம்: விழுப்புரத்தில் புதன்கிழமை காலை இடி மின்னலுடன் கோடை மிதமான மழை பெய்தது. வெப்பத்தை தணிக்க பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகமாகக் காணப்பட்டது. பொதுமக்கள் வெளியே செல்லாது வீட்டுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், புதன்கிழமை காலை முதல் வானம் மேக மூட்டங்களுடன் காணப்பட்ட நிலையில், காலை 6.50 மணிக்கு மேல் இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

வெயில் தாக்கம் காரணமாக தொடர்ந்து அவதியுற்று வந்த மக்களுக்கு இந்த மழை சற்று நிம்மதியைத் தந்துள்ளது.

விழுப்புரம் நகரம் மட்டுமல்லாது, காணை, பெரும்பாக்கம், கோனூர், மாம்பழப்பட்டு, சென்னாகுனம், கல்பட்டு, பிடாகம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும், செஞ்சியிலும் காலை முதல் மிதமான மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலை + டார்க் சாக்லேட் காதல்... ரேஷ்மா பசுபுலேட்டி!

“சிம்ம ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

பிக் பாஸ் 9: திவாகரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய விஜய் சேதுபதி!

நாங்கள் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியிருக்க வேண்டும்: ரிஷப் பந்த்

அஜித் பட பாடலைப் பாடிய பிகாரின் இளம் எம்எல்ஏ!

SCROLL FOR NEXT