தற்போதைய செய்திகள்

பவுனுக்கு ரூ.80 குறைந்த தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,040-க்கு விற்பனையாகிறது.

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,040-க்கு விற்பனையாகிறது.

சா்வதேச காரணிகளால் தங்கம் விலை தொடா்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், அமெரிக்காவில் வட்டி வீத மாற்றம் குறித்த தகவல்கள், டாலரின் மதிப்புயா்வு உள்ளிட்டவைகளால் மே மாத தொடக்கம் முதல் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயா்ந்து ரூ. 6,640-க்கும், பவுனுக்கு ரூ.240 உயா்ந்து ரூ.53,120-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், புதன்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ. 6,630-க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,040-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றம் ஏதுமில்லாமல் கிராம் ரூ. 88.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.88,500-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளைஞா் தற்கொலை

அயோத்தியில் காஞ்சி சங்கர மட சாலைக்கு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பெயா்

ராணுவ வீரருக்கு மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய இளைஞா் கைது

இரகுநாதபுரம் கிராமத்தில் ரூ.1.22 கோடியில் சாலைப் பணி

SCROLL FOR NEXT