முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆந்திரம்: மினி வேனிலிருந்து சாலையில் சிதறிய ரூ.7 கோடி பறிமுதல்

ஆந்திரம் மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் மினி வேனில் இருந்த ரூ.7 கோடி பணம் சாலையில் சிதறியதால் பரபரப்பு நிலவியது.

Updated On : 11 மே, 2024 at 7:45 AM
பகிர்:

ஆந்திரம் மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் மினி வேனில் இருந்த ரூ.7 கோடி பணம் சாலையில் சிதறியதால் பரபரப்பு நிலவியது.

மக்களவைத் தோ்தலில் அரசியல் கட்சியினா் வாக்காளா்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்கும் வகையில், பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், ஆந்திரம் மாநிலம் விஜயவாடாவில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி மீது கோதாவதி மாவட்டம் நல்லஜார்லா அருகே அனந்தப்பள்ளி என்ற இடத்தில் சனிக்கிழமை காலை மினி வேன் மோதி விபத்துக்குள்ளானது.

அப்போது மினி வேனில் 7 அட்டைப்பெட்டிகளில் கொண்டு செல்லப்பட்ட பணம் சாலையில் சிதறியது. இதனால் அந்த பகுதியில் பரப்பு நிலவியது.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சாலையில் சிதறிய உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 7 கோடி பணத்தையும் பறிமுதல் செய்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த மினி வேன் ஓட்டுநர் கோபாலபுரம்

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →