நந்தியால் (ஆந்திரம்): ஆந்திரம் மாநிலம் நந்தியால் மாவட்டத்தில் உள்ள சிரிவெள்ளமெட்டா அருகே தனியார் பேருந்து ஒன்று லாரி மீது மோதியதில் மூன்று பேர் பலியாகினர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆந்திரம் மாநிலம் நெல்லூரில் இருந்து ஹைதராபாத் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து நந்தியால் மாவட்டம் சிரிவெள்ளமெட்டா அருகே வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் பேருந்தின் டயர் வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த லாரி மீது மோதி பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இந்தச் சம்பவத்தின் போது பேருந்தில் 36 பயணிகள் இருந்ததாகத் கூறப்படுகிறது.
பேருந்து தீப்பிடித்தை அறிந்து ஒடி வந்த உள்ளூர் மக்கள் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். உள்ளூர் டிசிஎம் ஓட்டுநர் ஒருவர் பேருந்தின் ஜன்னல்களை உடைத்து, 36 பயணிகள் பாதுகாப்பாக தப்பிக்க உதவியதாகவும், பேருந்து கிளீனரும் உள்ளே சிக்கிய பயணிகளைக் காப்பாற்றுவதில் முக்கியப் பங்கு வகித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பெரும் உயிர் பலி தவிர்க்கப்பட்டது.
இருப்பினும், இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர், லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் உள்ளிட்ட 3 பேர் பலியாகினர் மற்றும் பலத்த காயமடைந்து நான்கு பேர் மேல் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் எட்டு பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டதுடன் உடனடி மருத்துவ உதவிகளை வழங்கினர்.
தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், பேருந்தும், லாரியும் தீயில் எரிந்து நாசமானது.
விபத்து உள்ளூர் மக்கள் கூறுகையில், பேருந்தின் டயர் வெடித்ததால், பேருந்து லாரி மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது. பேருந்து கிளீனர் ஒரு ஜன்னலை உடைத்து பயணிகளைக் காப்பாற்ற உதவியதாகவும் கூறினர்.
இந்தச் சம்பவம் குறித்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.