மம்தா  
தற்போதைய செய்திகள்

மோடியின் வழிகாட்டுதலின்படி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: மம்தா!

தேர்தல் ஆணையம் ஒரு பொம்மை போல செயல்படுகிறது என மம்தா குற்றஞ்சாட்டியுள்ளார்.

DIN

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தின் சின்சுராவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளரும், நடிகையுமான ரச்சனா பானர்ஜியை ஆதரித்துபேசிய மம்தா பானர்ஜி,"தேர்தல் ஆணையம் பாஜகவுக்காக இரண்டரை மாதங்களாக வாக்குப்பதிவை நடத்துகிறது. இதனால்,சாதாரண மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை அவர்கள் உணர்ந்திருக்கிறார்களா?".

பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி தேர்தல் ஆணையம், அவரின் கைப்பாவையாக செயல்படுகிறது.

பிரதமர் மோடி, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தை விரிவுபடுத்த அறிவித்ததன் மூலம் தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளார்.

தேர்தல் நடக்கும்போது ஏன் இப்படிச் சொல்கிறீர்கள்? இதை முன்பே அறிவித்திருக்க வேண்டும்.

பாஜக மக்களவைத் தேர்தலில் 400 இடங்களை எட்டுமா என்பது சந்தேகம் தான். 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று பாஜக கூறுகிறது, ஆனால் இந்த முறை அது நடக்காது என்று மக்கள் கூறுகின்றனர்.

மத்தியில் ஆட்சி அமைக்க இந்தியா கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிப்போம்.

மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), பொது சிவில் சட்டம் (யுசிசி) ஆகியவற்றை அமல்படுத்த முடியாது" எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இனி அதிமுக அல்ல, எதிமுக! - TTV Dhinakaran

750 தாமரைகள் கொண்ட மணல் சிற்பம்: பிரதமர் மோடிக்கு பட்நாயக் வாழ்த்து!

Jailer 2 ரிலீஸ் குறித்து Rajinikanth!

மெட்ராஸ் ஐஐடி-ல் புராஜெக்ட் அசோசியேட் பணி

மோடியின் தாயார் ஏஐ விடியோ: உடனே நீக்க காங்கிரஸுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு!

SCROLL FOR NEXT