தொடர் மழையின் காரணமாக முட்டல் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவி நீர்.  
தற்போதைய செய்திகள்

கோடை மழையால் உயிர் பெற்ற முட்டல் நீர்வீழ்ச்சி!

ஆத்தூர் பகுதியில் தொடர் மழையின் காரணமாக, நீர்வரத்து வரத் தொடங்கிய நிலையில் உயிர் பெற்ற முட்டல் நீர்வீழ்ச்சியில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

DIN

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் தொடர் மழையின் காரணமாக, நீர்வரத்து வரத் தொடங்கிய நிலையில் உயிர் பெற்ற முட்டல் நீர்வீழ்ச்சியில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

சேலம் மாவட்ட மக்களை கடந்த இரண்டு மாதங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், அதிகபட்சமாக 108.2 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவானது. வெயிலின் தாக்கம் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை கடும் அவதிக்குள்ளாகினா்.

கடந்த 4 ஆம் தேதி கோடையின் உச்சமான அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில், சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீா்த்த கனமழையால் வெயிலின் தாக்கம் குறைந்தது. தொடா்ந்து, கடந்த மூன்று நாள்களாக தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. இதனால் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசுகிறது. தொடா் மழையால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனா்.

இந்த நிலையில்,சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் தொடர் மழையின் காரணமாக, ஆத்தூர் வனச்சரகத்திற்கு உள்பட்ட முட்டல் கிராமத்தில் உள்ள ஆனைவாரி நீர் வீழ்ச்சியில் நீர் வரத்து அதிகரித்து வரத் தொடங்கிய நிலையில் உயிர் பெற்ற நீர்வீழ்ச்சியில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேர்தல் ஆணையத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு: ‘பாரபட்சத்துடன் செயல்படவில்லை!'

ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லாது: பாலு அறிவிப்பு

மலர்ந்த முகமே... மோனிஷா!

கூலி வசூல் எவ்வளவு?

கோவைக் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு! தற்காலிகமாக மூடல்!

SCROLL FOR NEXT