தற்போதைய செய்திகள்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி காலமானார்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி அனிதா கோயல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (மே 16) அதிகாலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

DIN

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி அனிதா கோயல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (மே 16) அதிகாலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனரும் தொழிலதிபருமான நரேஷ் கோயல் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த இவர், 1992-ஆம் ஆண்டில் ஜெட் ஏர்வேஸை நிறுவினார்.

முன்னணி இடத்தில் இருந்த ஜெட் ஏர்வேஸ் 2017-ம் ஆண்டுப் பிறகு நஷ்டத்தைச் சந்திக்கத் தொடங்கியது. இழப்பு அதிகமான நிலையில், 2019 ஏப்ரலில் ஜெட் ஏர்வேஸ் அதன் விமான சேவையை முழுமையாக நிறுத்தியது. ஜெட் ஏர்வேஸின் நிறுவனர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ரூ.538 கோடி கடன்பெற்று மோசடி செய்துள்ளதாக கனரா வங்கி அளித்த புகாரின் பெயரில் கடந்தாண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்து, சோதனை நடத்தியதில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வங்கிகளில் இருந்து பெற்ற கடன்களை நிறுவனச் செயல்பாடுகள் சார்ந்து இல்லாமல் வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தியுள்ளது என்று தனது விசாரணையின் அடிப்படையில் சிபிஐ தெரிவித்தது. அமலாக்கத் துறை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணையைத் தொடங்கியது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நரேஷ் கோயலை அமலாக்கத்துறை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா கோயல் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, 2 மாதங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று அதிகாலையில் அனிதா கோயல் உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிரத்னம் படத்தில் நாயகனாகும் துருவ் விக்ரம்!

ரொனால்டோவின் நம்பிக்கை... வெற்றி ரகசியம் பகிர்ந்த சிராஜ்!

பாகிஸ்தான் பருமழைக்கு 302 பேர் பலி, 727 பேர் காயம்!

பாஜக கூட்டணி எம். பி. க்கள் கூட்டத்தில் பிரதமரை வாழ்த்தி ஹர ஹர மகாதேவ் கோஷம்!

ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

SCROLL FOR NEXT