சென்னையில் இருந்து கோவைக்கு ஆம்னி பேருந்தில் பயணித்த ஐடி பெண் ஊழியர் இறந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பேருந்தில் பயணித்த பயணிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் இருந்து கோவைக்கு ஆம்னி பேருந்தில் ஐடி பெண் ஊழியர் மகாலட்சுமி பயணித்துள்ளார். கோவையில் இறங்க வேண்டிய இடம் வந்ததும் அந்த பெண் இறங்காததால், சந்தேகத்தின் பேரில் ஓட்டுநரும் நடத்துநரும் எழுப்பியது போது எந்தவித அசைவும் இல்லாமல் இருந்துள்ளார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். தொடர்ந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மகாலட்சுமியை பரிசோதித்து பார்த்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகாலட்சுமி கடந்த சில நாள்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்தது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மகாலட்சுமியின் உடல் உடல்கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.