சுனில் சேத்ரி 
தற்போதைய செய்திகள்

ஓய்வை அறிவித்தார் இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி!

இந்தியக் கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, சர்வதேசப் போட்டிகளில் இருந்து விலகுவதாக, தன் ஓய்வை அறிவித்துள்ளார்.

DIN

இந்தியக் கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, சர்வதேசப் போட்டிகளில் இருந்து விலகுவதாக, தன் ஓய்வை அறிவித்துள்ளார்.

39 வயதாகும் சுனில் சேத்ரி, ஜூன் 6ஆம் தேதி நடக்கவிருக்கும் ஃபிஃபா உலகக்கோப்பைக் கால்பந்து தகுதிச்சுற்றில் குவைத் அணிக்கு எதிரான போட்டியுடன், தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2002ஆம் ஆண்டு பிரபல கிளப் அணிகளில் ஒன்றான மோகன் பகான் அணியுடன், தனது கால்பந்து பயணத்தைத் தொடங்கினார், சுனில் சேத்ரி. 2005ஆம் ஆண்டு சுனில் சேத்ரி இந்திய அணிக்காக அறிமுகமான நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதல் சர்வதேச கோலை அடித்து சாதனை படைத்தார். இந்திய அணிக்காக 150 போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் சேத்ரி, மொத்தமாக 94 கோல்களை வென்றுள்ளார். இதன்மூலம், உலகிலேயே அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாமிடத்தில் சுனில் சேத்ரி இருக்கிறார். இவருக்கு முன்பாக கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லயோனல் மெஸ்ஸி ஆகியோர் உள்ளனர்.

ஓய்வுகுறித்து, சுனில் சேத்ரி வெளியிட்டுள்ள விடியோவில், ” ‘எனது கடைசி போட்டியில் விளையாட போகிறேன்’ என்று முடிவு செய்த பின், எனது குடும்பத்தினரிடம் தான் முதலில் பகிர்ந்து கொண்டேன். அப்போது என் தந்தை மகிழ்ச்சியடைந்தார். ஆனால் என் மனைவி கண்ணீர் சிந்தினார். ஒவ்வொரு நாளும் இதற்காக வருத்தப்படுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

சுனில் சேத்ரியின் ஓய்வினையறிந்த பின், பலரும் வாழ்த்துகளும் வருத்தங்களும் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிர் உலகக்கோப்பை: ஸ்மிரிதி, ஹர்மன்ப்ரீத் ஆட்டமிழப்பு - இந்தியா தடுமாற்றம்!

என் மன வானில்... ஹிமா பிந்து!

Online Game-ல் பாலியல் துன்புறுத்தல்! தனது மகள் சந்தித்த சங்கடம் குறித்து Akshay kumar வெளிப்படை!

திருச்சி ஐஐஎம்-இல் நூலகப் பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

பிகாரில் நவ. 22க்குள் தேர்தல் - வாக்குச்சாவடிக்கு 1,200 வாக்காளர்கள்: தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT